image courtesy: twitter/@BCBtigers  
கிரிக்கெட்

2-வது ஒருநாள் போட்டி: இலங்கை அணிக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த வங்காளதேசம்

வங்காளதேச அணி தரப்பில் அதிகபட்சமாக தவ்ஹித் ஹரிடோய் 96 ரன்கள் குவித்தார்.

தினத்தந்தி

சட்டோகிராம்,

வங்காளதேசம் -இலங்கை இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்றிருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சட்டோகிராமில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணிக்கு லிட்டன் தாஸ் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தாலும், அடுத்து களமிறங்கிய வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால் வங்காளதேச அணிக்கு ரன் சீராக உயர்ந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த வங்காளதேசம் 286 ரன்களை குவித்தது. இதன் மூலம் இலங்கை அணிக்கு வங்காளதேசம் 287 ரன்கள் என்ற வலுவான இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.

வங்காளதேச தரப்பில் அதிகபட்சமாக தவ்ஹித் ஹரிடோய் 96 ரன்களும், சவுமியா சர்கார் 68 ரன்களும் குவித்தனர். இலங்கை தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஹசரங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி இலங்கை அணி பேட்டிங் செய்ய உள்ளது. 

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு