கிரிக்கெட்

2-வது ஒருநாள் போட்டி : நெதர்லாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி

118 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது

தினத்தந்தி

நெதர்லாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது .

இரு அணிகளுக்கும் இடையிலான டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது . நியூசிலாந்து - நெதர்லாந்து அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது

இந்நிலையில் 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது .டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது .

அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். அந்த அணி 32 ரன்கள் எடுப்பதற்க்குள் 5 விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியது.

நியசிலாந்து அணியில் டாம் லேதம் மட்டும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார் .அதிரடியாகி விளையாடிய அவர் சதம் அடித்து அசத்தினார் .

இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக டாம் லேதம் 140 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தொடர்ந்து 265 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி 34.1 ஓவர்களில் 10 விக்கெட் இழந்து 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது .

இதனால் 118 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது ,3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-0 என கைப்பற்றியது

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு