கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி: இந்திய அணிக்கு 276 ரன்கள் வெற்றி இலக்கு

இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு 276 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு,

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்று இருப்பதால், ஷிகர் தவான் தலைமையில் 2-ம் தர இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை எளிதில் தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணி முதலில் விளையாடி வந்தது.

இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இலங்கை அணி 275 ரன்கள் எடுத்து 9 விக்கெட்களை இழந்தது. இதையடுத்து இந்திய அணிக்கு 276 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக சாரித் அசலங்கா 68 பந்துகளில் 65 ரன்களும், அவிஷ்கா பெர்னாண்டோ 71 பந்துகளில் 50 ரன்களும் எடுத்துள்ளனர்.

இந்திய அணி சார்பில் யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார் ஆகியோர் 3 விக்கெட்களையும், தீபக் சாஹர் 2 விக்கெட்களையும் எடுத்துள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்