கிரிக்கெட்

2-வது ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணிக்கு வெஸ்ட்இண்டீஸ் பதிலடி

2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு வெஸ்ட்இண்டீஸ் பதிலடி கொடுத்தது.

தினத்தந்தி

பிரிட்ஜ்டவுன்,

இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் சேர்த்தது. தனது 4-வது சதத்தை பூர்த்தி செய்த ஹெட்மயர் 83 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 104 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் அரைசதம் (ஒரு பவுண்டரி, 4 சிக்சருடன் 50 ரன்) அடித்தார்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 263 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 79 ரன்னும், கேப்டன் இயான் மோர்கன் 70 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட்இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. 3-வது ஆட்டம் செயின்ட் ஜார்ஜில் நாளை நடக்கிறது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்