Image Courtesy: X (Twitter)  
கிரிக்கெட்

2-வது தகுதி சுற்று; டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு

ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.

தினத்தந்தி

சென்னை,

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை பந்தாடி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

நேற்று முன்தினம் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வெளியேற்றி 2-வது தகுதி சுற்று ஆட்டத்துக்கு ஏற்றம் கண்டது.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் - வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு