கிரிக்கெட்

2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

கட்டாக்கில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

தினத்தந்தி

சண்டிகார்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்தில் உள்ள நியூ சண்டிகாரில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால், தென்ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்யவுள்ளது.

டிரிஸ்டான் ஸ்டப்ஸ், கேஷவ் மகராஜ், அன்ரிச் நோர்டியா போட்டியில் விளையாடவில்லை. அவர்களுக்கு பதிலாக ரீஜா ஹென்ட்ரிக்ஸ், ஜார்ஜ் லின்டே, ஓட்நீல் பார்த்மேன் ஆகிய 3 வீரர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார்.

போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஜிதேஷ் ஷர்மா, ஹர்திக் பாண்டயா, ஷிவம் துபே, அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.

தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ரீஜா ஹென்ட்ரிக்ஸ், டிவால்ட் பிரேவிஸ், டேவிட் மில்லர், டோனோவன் பெரேரா, ஜார்ஜ் லின்டே, மார்கோ ஜேன்சென், லுதோ சிபாம்லா, லுங்கி இங்கிடி, ஓட்நீல் பார்த்மேன். இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி