கிரிக்கெட்

"இந்தியாவை வீழ்த்துவதே என் இலக்கு.." - ஜேக்கப் பெத்தெல் அதிரடி கருத்து

நேற்று நடந்த 2-வது டி20 போட்டியில் ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் குவித்தார் ஜேக்கப் பெத்தெல்.

லண்டன்,

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் குவித்து இங்கிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற ஜேக்கப் பெத்தெல், உலகின் சிறந்த அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே தனது இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. 191 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஜேக்கப் பெத்தெல்லின் பொறுப்பான மற்றும் அதிரடியான ஆட்டத்தின் உதவியுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.

ஆட்டநாயகன்

இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை பெற்ற ஜேக்கப் பெத்தெல், இந்திய அணிக்கு எதிராக மீண்டும் சிறப்பாக விளையாடிது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "உலகின் சிறந்த அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே ஒவ்வொரு வீரரின் விருப்பமாக இருக்கும். அதனால் இந்தியாவுக்கு எதிராக இந்த இன்னிங்ஸை ஆடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.