Image Courtesy: @ICC  
கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்; வங்காளதேச அணி அறிவிப்பு - அணிக்கு திரும்பிய முன்னணி ஆல் ரவுண்டர்

இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

தினத்தந்தி

டாக்கா,

இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கையும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசமும் கைப்பற்றின.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 30ம் தேதி சட்டோகிராமில் தொடங்குகிறது.

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் முன்னணி ஆல்ரவுண்டரான ஷகிப் அல் ஹசன் இடம் பிடித்துள்ளார். இந்த அணிக்கு நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான வங்காளதேச அணி விவரம்;

நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), ஜாகிர் ஹசன், மஹ்முதுல் ஹசன் ஜாய், ஷத்மன் இஸ்லாம், லிட்டன் தாஸ், மொமினுல் ஹக், ஷகிப் அல் ஹசன், ஷஹாதத் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், நயீம் ஹசன், தைஜுல் இஸ்லாம், ஷோரிஃபுல் இஸ்லாம், கலீத் அஹ்மத், நஹித் ராணா, ஹசன் மஹ்முத்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்