image courtesy: twitter/@TheRealPCB 
கிரிக்கெட்

2-வது டெஸ்ட்: பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சு தேர்வு

இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

தினத்தந்தி

ராவல்பிண்டி,

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது போட்டியில் வங்காளதேச அணி பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது.

இதனையடுத்து 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நேற்று தொடங்க இருந்தது. ஆனால் அங்கு மழை பெய்ததன் காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் 2-வது நாளான இன்று இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்