image courtesy; AFP 
கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான 2வது டெஸ்ட்: இங்கிலாந்தின் ஆடும் லெவன் அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

லண்டன்,

கிரேக் பிராத்வைட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 114 ரன் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நாளை தொடங்குகிறது.

இதையடுத்து இந்த டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் கடந்த டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு பதிலாக மார்க் வுட் இடம் பிடித்துள்ளார். மற்றபடி முதல் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்த வீரர்கள் இந்த போட்டிக்கான அணியிலும் இடம் பிடித்துள்ளனர்.

2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன்:

ஜாக் க்ராவ்லி, பென் டக்கட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மார்க் வுட், சோயப் பஷீர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து