கிரிக்கெட்

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமாகும் 3 இந்திய வீரர்கள்

அயர்லாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா பங்கேற்கிறது.

புதுடெல்லி,

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் 3 இந்திய வீரர்கள் அறிமுகமாக உள்ளனர்.

டி20 தொடர்

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து, அந்த அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இந்த போட்டிகள் வருகிற 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன.

அயர்லாந்து தொடரை தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று, அந்த அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜூலை 1, 4, 7, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் விளையாட உள்ளது.

வைபவ் சூர்யவன்ஷி

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் 15 வயதான இடதுகை தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி இடம்பிடித்துள்ளார். இளம் வயதிலேயே தனது அதிரடி ஆட்டத்தால் கவனம் ஈர்த்துள்ள அவர், இந்த தொடரின் மூலம் இந்திய அணிக்காக டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

பிரின்ஸ் யாதவ்

அடுத்ததாக வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் டி20-ல் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய அவர், 2026 ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக 14 போட்டிகளில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

சூர்யான்ஷ் ஷெட்கே

மும்பையை சேர்ந்த 23 வயதான ஆல்-ரவுண்டர் சூர்யான்ஷ் ஷெட்கே இந்த தொடரில் அறிமுகமாக வாய்ப்புள்ள மற்றொரு வீரராவார்.

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் இந்தியா-ஏ அணிக்காக சிறப்பான ஆல்-ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், காயம் காரணமாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் இருந்து விலகிய நிதிஷ் குமார் ரெட்டிக்கு மாற்றாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.