கிரிக்கெட்

3வது ஒரு நாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு

இலங்கைக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

தினத்தந்தி

விசாகப்பட்டினம்,

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.

இந்த நிலையில் இந்தியா- இலங்கை அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கடற்கரை நகரான விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது.

திருமணத்தினால் விராட் கோஹ்லிக்கு இந்த போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு பதிலாக இப்போட்டியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார். இந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்