சென்னை,
3-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடிய அந்த அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் தர்மசாலாவில் நடந்த முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், லக்னோவில் நடந்த 2-வது ஆட்டத்தில் 17 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் இந்தியா- ஆப்கானிஸ்தான் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் பந்து வீச உள்ளது.