கிரிக்கெட்

3-வது ஒருநாள் போட்டி- ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா ? வங்காளதேசத்துடன் நாளை மோதல்

வங்காளதேசம் 3-வது போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்யும் ஆர்வத்துடன் உள்ளது

தினத்தந்தி

சிட்டாகாங்,

3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்காளதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில், 2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தி வங்காளதேச அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்டாகாங்கில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டியிலாவது இந்திய அணி வெற்றி பெற்று ஆறுதல் அளிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர்.. காயம் அடைந்த கேப்டன் ரோகித் சர்மா நாளைய போட்டியில் விளையாடவில்லை. இதனால் லோகேஷ் ராகுல் தலைமை பொறுப்பை ஏற்பார். தீபக்சாகர், குல்தீப் சென் ஆகியோரும் காயத்தால் விலகி உள்ளனர்.

வங்காளதேசம் 3-வது போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்யும் ஆர்வத்துடன் உள்ளது நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு