கிரிக்கெட்

3வது டி20 போட்டி : ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை ? ஆஸ்திரேலிய அணியுடன் இன்று மோதல்

இரு அணிகளும் மோதும் 3வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது

தினத்தந்தி

கொழும்பு,

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அந்நாட்டு அணியுடன் 3 டி20, 5 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இலங்கை - ஆஸ்திரேலியா இடையே முதல் டி20 போட்டி போட்டியில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி போட்டியில் இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 3வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது .இன்று இரவு 7.00 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது .ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றி விட்டதால் ,இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியுடன் 20 ஓவர் தொடரை நிறைவு செய்ய இலங்கை அணி முயற்சிக்கும்.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்