கிரிக்கெட்

3வது டி20 : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

செஞ்சூரியன்,

வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. நடந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என தொடரை கைப்பற்றியது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி 20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது, அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.