Image Courtesy: @ZimCricketv 
கிரிக்கெட்

3வது டி20 போட்டி; இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் நாளை மோதல்

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.

தினத்தந்தி

ஹராரே,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி ஹராரேவில் நாளை நடைபெற உள்ளது. முதல் போட்டியில் தோல்வி கண்டு, 2வது போட்டியில் எழுச்சி கண்ட இந்திய அணி வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்புடன் உள்ளது.

அதேவேளையில், ஜிம்பாப்வே அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப கடுமையாக போராடும். எனவே வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்