Image Courtesy: AFP  
கிரிக்கெட்

வங்காளதேசத்திற்கு எதிரான 3வது டி20 போட்டி; காயம் காரணமாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் விலகல்

இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

தினத்தந்தி

சில்ஹெட்,

இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் டி20 தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இந்த ஆட்டம் இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில் இன்று நடைபெற உள்ள 3வது டி20 போட்டியில் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரான இடம் பெற மாட்டார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2வது டி20 ஆட்டத்தின் போது அவருக்கு இடது கால் தொடை தசையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இன்று நடைபெற உள்ள 3வது டி20 ஆட்டத்திற்கான அணியில் இடம் பெற மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து