கிரிக்கெட்

3-வது டெஸ்ட்: லாதம் - கான்வே சதம்... இங்கிலாந்தை திணறடித்த நியூசிலாந்து

நியூசிலாந்து-இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

நாட்டிங்காம்,

நியூசிலாந்து - இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டியில் லாதம், கான்வே சதம் அடித்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை திணறடித்தனர்.

டாஸ்

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து தொடக்க வீரர்களாக களமிறங்கிய டாம் லாதம் மற்றும் டிவான் கான்வே தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

சதம்

டாம் லாதம் 149 பந்துகளில் தனது 17-வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் டிவான் கான்வே, 174 பந்துகளில் தனது 8-வது டெஸ்ட் சதத்தை எட்டினார். அப்போது அணி 317 ரன்கள் எடுத்திருந்தபோது டாம் லாதம் 151 ரன்களில் கேட்ச் ஆனார். தொடர்ந்து டிவான் கான்வே 157 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஹென்றி நிகோல்ஸ் 36(48) ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 7 (22) ரன்களிலும் அவுட்டாகினர்.

முதல் நாள் முடிவு

இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 84.1 ஓவர்களில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 361 ரன்கள் குவித்துள்ளது.