சிட்னி,
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், 3 டெஸ்ட் போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில் 3போட்டிகளிலும் வெற்றிபெற்று ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 4-வது ஆஷிஸ் டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பெட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனை தொடர்ந்து அந்த அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மார்கஸ் ஹரிஸ் களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். 72 பந்துகளை சந்தித்த வார்னர் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டூவர்ட் பிராட் பந்து வீச்சில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஹரிஸ் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆண்டர்சன் பந்து வீச்சில் வெளியேறினார்.
இதையடுத்து களமிறங்கிய மார்னஸ் லபூஷேன் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார் வுட் பந்து வீச்சில் பட்லரிடம் கேட் கொடுத்து அவுட் ஆனார். இறுதியில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளல்து. ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்னிலும், உஸ்மான் குவாஜா 4 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.