கிரிக்கெட்

4வது ஒரு நாள் போட்டி: 100வது போட்டியில் சதம் அடித்த ஷிகர் தவான்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர் ஷிகார் தவான் தனது 100வது போட்டியில் சதம் அடித்துள்ளார்.

ஜோகன்னெஸ்பர்க்,

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டி ஜோகன்னெஸ்பர்க் நகரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் (5) ரன்களில் ரபடாவின் பந்து வீச்சில் அவரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவருடன் விளையாடிய ஷிகர் தவான் 18.2வது ஓவரில் அரை சதம் அடித்து அசத்தினார்.

இதனை தொடர்ந்து தவானுடன் இணைந்து விளையாடிய கேப்டன் விராட் கோஹ்லி 21.2வது ஓவரில் அரை சதம் அடித்துள்ளார். இந்த நிலையில் ஷிகர் தவான் 33.1வது ஓவரில் தனது 100வது போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

கோஹ்லி (75) 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் ஆட்டமிழந்துள்ளார். தவானுடன் ரஹானே (6) இணைந்து விளையாடி வருகிறார். இந்திய அணி 35வது ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...