சென்னை,
சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசி தொடர்களில் அதிக கோப்பைகள் வென்ற அணிகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. இந்தியா உள்ளிட்ட பல அணிகளும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் முதல் ஐந்து அணிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
1. ஆஸ்திரேலியா - 10 ஐசிசி கோப்பைகள்
ஐசிசி வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாக ஆஸ்திரேலியா திகழ்கிறது. அவர்கள் மொத்தம் 10 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளனர்.
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை - 6 முறை (1987, 1999, 2003, 2007, 2015, 2023)
ஐசிசி டி20 உலகக் கோப்பை - 1 முறை (2021)
ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபி - 2 முறை (2006, 2009)
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - 1 முறை (2023)
2. இந்தியா - 8 ஐசிசி கோப்பைகள்
சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் வலுவான அணிகளில் ஒன்றாக இந்தியா கருதப்படுகிறது. குறிப்பாக குறைந்த ஓவர் போட்டிகளில் இந்தியா சிறந்து விளங்குகிறது.
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை - 2 முறை (1983, 2011)
ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபி - 3 முறை (2002 – பகிர்வு, 2013, 2025)
ஐசிசி டி20 உலகக் கோப்பை - 3 முறை (2007, 2024, 2026)
3. வெஸ்ட் இண்டீஸ் - 5 ஐசிசி கோப்பைகள்
ஒருகாலத்தில் உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய அணியாக வெஸ்ட் இண்டீஸ் இருந்தது.
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை - 2 முறை (1975, 1979)
ஐசிசி டி20 உலகக் கோப்பை - 2 முறை (2012, 2016)
ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபி - 1 முறை (2004)
4. பாகிஸ்தான் - 3 ஐசிசி கோப்பைகள்
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை - 1 முறை (1992)
ஐசிசி டி20 உலகக் கோப்பை - 1 முறை (2009)
ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபி - 1 முறை (2017)
5. இலங்கை - 3 ஐசிசி கோப்பைகள்
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை – 1 முறை (1996)
ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபி – 1 முறை (2002 – இந்தியாவுடன் பகிர்வு)
ஐசிசி டி20 உலகக் கோப்பை – 1 முறை (2014)