கிரிக்கெட்

சர்வதேச அளவிலான கிரிக்கெட்டில் 50 வெற்றிகள்... விராட் கோலி சாதனை

சர்வதேச அளவிலான கிரிக்கெட்டின் ஒவ்வொரு பிரிவிலும் 50 வெற்றிகளை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி டி20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில், இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனும் கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

இதற்கு முன் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில், சர்வதேச அளவிலான கிரிக்கெட்டின் ஒவ்வொரு பிரிவிலும் விராட் கோலி 50 வெற்றிகளை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்காக பி.சி.சி.ஐ. அமைப்பு கோலிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளது. இந்த வெற்றியையடுத்து, வருகிற 26ந்தேதி நடைபெற உள்ள போட்டிகளுக்காக கோலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு