Image Courtesy: AFP  
கிரிக்கெட்

5வது டி20 போட்டி: இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

தினத்தந்தி

லாகூர்,

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. 4 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்றுள்ளன. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5வது டி-20 போட்டி லாகூரில் இன்று நடைபெறுகிறது. முன்னதாக 4வது டி-20 போட்டியில் வெற்றிக்கு மிக நெருக்கமாக இருந்த இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 3 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று வெற்றிப்பாதைக்கு திரும்ப இங்கிலாந்து அணியினர் முயற்சி செய்வர். அதே வேளையில் பாகிஸ்தான் அணியினரும் வெற்றிக்காக கடுமையாக போராடுவர். அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்