புனே,
14வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 16வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் வான்கடே ஸ்டேடியத்தில் விளையாடின. இதில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் 177 ரன்களை பெங்களூரு அணி சேசிங் செய்து விளையாடியது.
வெற்றி இலக்கான 178 ரன்களை நோக்கி விளையாடிய பெங்களூரு அணியில், தொடக்க ஆட்டக்காரர் மற்றும் அணி கேப்டனான விராட் கோலி போட்டியில் அரை சதம் விளாசினார். அதனுடன் 51வது ரன் எடுத்தபொழுது, 6 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 13வது ஓவரில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இந்த பட்டியலில் டாப் 5 வரிசையில் 4 பேர் இந்திய வீரர்கள் ஆவர். கோலிக்கு அடுத்து, சுரேஷ் ரெய்னா (5,448), ஷிகர் தவான் (5,428) ஆகியோர் முறையே 2 மற்றும் 3வது இடங்களில் உள்ளனர்.
டேவிட் வார்னர் (5,384) மற்றும் ரோகித் சர்மா (5,368) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். கோலி தனது 196வது போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.