கிரிக்கெட்

ஐபிஎல்: டெல்லி அணிக்கு 144 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது பஞ்சாப்

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு 144 ரன்களை வெற்றி இலக்காக பஞ்சாப் அணி நிர்ணையித்துள்ளது. #IPL #DDvKXIP

தினத்தந்தி

டெல்லி,

11-வது ஐபிஎல் போட்டித்தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் கவுதம் கம்பீர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற கவுதம் கம்பீர் தனது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார். இதன்படி, பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப் அணியில் வியக்கத்தக்க வகையில் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் நீக்கப்பட்டு ஆரோன் பிஞ்ச் சேர்க்கப்பட்டு இருந்தார். துவக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பிஞ்சும் கே.எல். ராகுலும் களம் இறங்கினர்.

இந்த ஜோடி, பஞ்சாப் அணியின் வழக்கான அதிரடியை வெளிக்காட்ட தடுமாறியது. பிஞ்ச் 2 (ரன்கள்) கே.எல்.ராகுல் (21 ரன்கள்), மயங்க் அகர்வால் ( 21 ரன்கள்), என சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர். கருண் நாயர் (34 ரன்கள், 32 பந்துகள்) கணிசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

யுவராஜ்சிங் (14 ரன்கள்) ஏமாற்றம் அளித்தார். டேவிட் மில்லர் 26 ரன்களில் வெளியேறினார். கேப்டன் அஷ்வின் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை