கிரிக்கெட்

செப்டம்பர் மாத ஐசிசி விருதுக்கான போட்டியில் அபிஷேக், குல்தீப்

இந்தியாவின் அபிஷேக் ஷர்மா, குல்தீப் யாதவ், ஜிம்பாப்வேயை சேர்ந்த பிரையன் பென்னட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தினத்தந்தி

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) மாதந்தோறும் சிறந்த வீரரை தேர்வு செய்து கவுரவிக்கிறது. இதன்படி செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதில் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்தியாவின் அபிஷேக் ஷர்மா, குல்தீப் யாதவ், ஜிம்பாப்வேயை சேர்ந்த பிரையன் பென்னட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மாதத்தில் அபிஷேக் ஷர்மா டி20 போட்டியில் ஆடி 3 அரைசதம் உள்பட 314 ரன்கள் சேர்த்ததுடன் ஆசிய கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார். இதே போல் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சிறந்த வீராங்கனைக்கான இறுதிப்பட்டியலில் இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, பாகிஸ்தானின் சித்ரா அமின், தென்ஆப்பிரிக்காவின் தஸ்மின் பிரிட்ஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இரு பிரிவிலும் அதிக வாக்குகள் அடிப்படையில் தலா ஒருவர் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். 

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி