கிரிக்கெட்

ஐ.சி.சி. ஆடவர் டி20 பேட்டிங் தரவரிசையில் அபிஷேக் சர்மா தொடர்ந்து முதல் இடம்

இளம் வீரரான அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடினார். 21 பந்துகளில் அரை சதம் (52 ரன்கள்) விளாசினார்.

புதுடெல்லி

ஐ.சி.சி. ஆடவர் டி20 பேட்டிங் தரவரிசைக்கான பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டு உள்ளது.

சமீபத்தில் குஜராத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் சூரிய குமார் தலைமையிலான இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால், 3-வது முறையாக ஆடவர் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதில் இளம் வீரரான அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடினார். 21 பந்துகளில் அரை சதம் (52 ரன்கள்) விளாசினார்.

அதில் 6 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். போட்டி தொடரின் தொடக்கத்தில், அடுத்தடுத்து 3 போட்டிகளில் ரன்கள் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி, அவர் சரியாக விளையாடாதபோதும், இறுதி போட்டியில் திறமையை வெளிப்படுத்தினார்.

இதில், 875 புள்ளிகளை பெற்ற அவர், ஐ.சி.சி. ஆடவர் டி20 பேட்டிங் தரவரிசையில் தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறார்.