தமிழ்நாடு அரசு-கலிபோர்னியா பல்கலைக்கழகம் இடையே முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்த ஒத்துழைப்பு மூலம் தமிழ்நாட்டில் நவீன, வலுவான மற்றும் நிலைத்தன்மை கொண்ட மின்சார அமைப்பை உருவாக்க இயலும்.

தமிழ்நாடு அரசு-கலிபோர்னியா பல்கலைக்கழகம் இடையே முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
Published on

சென்னை

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தலைமை செயலகத்தில், தமிழ்நாட்டின் மின்சார துறை வளர்ச்சி மற்றும் பசுமை எரிசக்தி பயன்பாட்டினை வலுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசிற்கும் அமெரிக்காவின் புகழ்பெற்ற கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் அமெரிக்காவின் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் துணை தலைவர்/ கல்வி திட்டமிடல் மற்றும் சர்வதேச அலுவலர் ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Also Read
மணிப்பூர்: மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்; 5 பேர் காயம்

தமிழ்நாடு அரசு-கலிபோர்னியா பல்கலைக்கழகம் இடையே முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கலிபோர்னியா பல்கலைக்கழகம், உலகளவில் எரிசக்தி ஆராய்ச்சி மற்றும் கொள்கை ஆய்வுகளில் முன்னணி கல்வி நிறுவனமாக திகழ்கிறது. பசுமை எரிசக்தி தொழில்நுட்பம், மின்சார சந்தை அமைப்பு, எரிசக்தி சேமிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் காலநிலை கொள்கைகள் போன்ற துறைகளில் சிறந்த அனுபவம் கொண்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாடு மின்சார துறையின் எதிர்கால வளர்ச்சியினை கருத்தில் கொண்டு, அதிகரித்து வரும் மின்தேவையை குறைந்த செலவில் வலுவான மற்றும் நிலைத்தன்மை கொண்ட மின்சார அமைப்பிற்கு திட்டமிடல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் ஒருங்கிணைப்பு, மின்கட்டமைப்புக்கு ஏற்ப மின்சார சேமிப்பு அமைப்புகள் மற்றும் மேம்பாடு, மின்சார சந்தை வடிவமைப்பு மற்றும் ஒழுங்குமுறை கொள்கை, மின்தொடரமைப்பு மற்றும் கட்டமைப்பை நவீனமயமாக்கல், காலநிலைக்கேற்ப நெகிழ்வு தன்மையுடன் கூடிய மின்சார அமைப்பு, தமிழ்நாடு மின்சார துறையில் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளித்தல் உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் ஒத்துழைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்த ஒத்துழைப்பு மூலம் அறிவு பரிமாற்றம், கூட்டு ஆய்வு மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டு, தமிழ்நாட்டில் நவீன, வலுவான மற்றும் நிலைத்தன்மை கொண்ட மின்சார அமைப்பை உருவாக்க இயலும். மேலும், இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் இருதரப்பும் இணைந்து தீர்மானிக்கும் தனி ஒப்பந்தங்கள் மூலம் செயல்படுத்தப்படும்.

இந்த ஒப்பந்தம் தமிழ்நாட்டின் பசுமை எரிசக்தி வளர்ச்சிக்கும், மின்சார துறையின் திறன் மேம்பாடு மற்றும் நம்பகமான மின்விநியோகம் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்துவதில், முக்கிய பங்கு வகிக்கும்.

இந்நிகழ்வின்போது தலைமை செயலாளர் நா. முருகானந்தம் இ.ஆ.ப, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கூடுதல் தலைமை செயலாளர் / தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., எரிசக்தித்துறை கூடுதல் தலைமை செயலாளர் (மு.கூ.பொ) மங்கத் ராம் சர்மா இ.ஆ.ப, இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன் இ.ஆ.ப, தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர் எஸ். அனீஷ் சேகர், இ.ஆ.ப., தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் ம. கோவிந்த ராவ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com