கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு

நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

தினத்தந்தி

அபுதாபி,

டி20 உலகக் கோப்பை தொடரில் அபுதாபியில் நடைபெறும் 27-வது சூப்பர்-12 சுற்று போட்டியில், குரூப்-2 பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான்-நமீபியா அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் இந்த ஆட்டத்தில் விளையாடுகின்றன. ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய கடைசி போட்டியில் பாகிஸ்தானை வெற்றிக்காக போராட வைத்திருந்தது. வெற்றிக்கு அருகில் சென்று ஆப்கானிஸ்தான் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

இரு அணி வீரர்கள் விவரம்,

ஆப்கானிஸ்தான்:

முகமது நபி(கேப்டன்), ஹஸ்ரதுல்லா ஷாஸாய், முகமது ஷாஸத், குர்பாஸ், நஜிபுல்லா, அஸ்கர் ஆப்கான், குல்பதின் நைப், ரஷித் கான், கரிம் ஜனத், ஹமித் ஹாசன், நவீநுல்-ஹாக்.

நமீபியா:

கெர்ஹார்ட் எராஸ்மஸ்(கேப்டன்),க்ரெய்க் வில்லியம்ஸ்,மைக்கேல் வான் லிங்கென், ஸேன் க்ரீன்,டேவி வெய்ஸ், ஸ்மிட், ப்ரைலிங்க், பிக்கி யா ப்ரான்ஸ், ஜான் நிக்கோல், ரூபென் ட்ரம்பெல்மாண், பெர்னார்டு ஸ்கோல்ட்ஸ்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்