கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை - யுஏஇக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

இந்த தொடரில் இன்று 3 முக்கிய லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

சென்னை,

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், ஏ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த தொடரில் இன்று 3 முக்கிய லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதலில் டெல்லியில் காலை 11 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அந்தவகையில், யுஏஇ அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இரு அணிகளும் தங்களின் பிரிவில் முன்னேற்றம் பெற இந்தப் போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்குகின்றன.

யுஏஇ பிளேயிங் லெவன்: ஆர்யன்ஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), முகமது வாசீம் (கேப்டன்), அலிஷான் ஷரஃபு, சோஹைப் கான், சயீத் ஹைதர், ஹர்ஷித் கௌஷிக், முகமது அர்ஃபான், ஹைதர் அலி, சிம்ரன்ஜீத் சிங், ஜுனைத் சித்திக், முகமது ஜவாதுல்லா

ஆப்கானிஸ்தான் பிளேயிங் லெவன்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஸத்ரான், குல்பதின் நயிப், செடிகுல்லா அடல், தர்விஷ் ரசூலி, அஸ்மத்துல்லா ஓமர்சாய், முகமது நபி, ரஷீத் கான் (கேப்டன்), முஜீப் உர் ரஹ்மான், நூர் அஹ்மத், ஜியாவுர் ரஹ்மான் ஷரீஃபி