கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பருக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை

ஊக்க மருந்து உட்கொண்டது உறுதியானதால் ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பருக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

துபாய்,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ஷாசத். போட்டி இல்லாத காலத்தில் இவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சிறுநீர் மாதிரி சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன் முடிவில் கிளன்புடெரோல் என்ற ஊக்கமருந்தை அவர் பயன்படுத்தியது அம்பலமானது.

இதையடுத்து அவருக்கு ஓராண்டு விளையாட தடைவிதித்து ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது. உடல்எடையை குறைக்கும் முயற்சியில் கவனக்குறைவாக இந்த மருந்தை அவர் உபயோகித்தது தெரியவந்ததால் ஐ.சி.சி. அவருக்கு கொஞ்சம் கருணை காட்டியுள்ளது. அதாவது அவரிடம் சிறுநீர் மாதிரி கடந்த ஜனவரி 17ந்தேதி எடுக்கப்பட்டது. அதனால் அவர் அடுத்த ஆண்டு ஜனவரி 17ந்தேதி மீண்டும் கிரிக்கெட் களம் திரும்ப முடியும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. 29 வயதான ஷாசத் இதுவரை 58 ஒரு நாள் போட்டிகளிலும், 58 இருபது ஓவர் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்