சென்னை,
தொடக்க ஆட்டக்காரராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் சேவாக்கை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில், 219 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி, வெறும் 69 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார்.
இந்த இன்னிங்ஸ் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் சேவாக்கை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.
வீரர் ரன்கள்
ரோகித் சர்மா 16,137
சேவாக் 16,119
சச்சின் 15,335
சுனில் கவாஸ்கர் 12,258
ஷிகர் தவான் 10,867
219 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, 28.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி, ஆப்கானிஸ்தான் அணியை ஒயிட்வாஷ் செய்தது.