கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் வருகிற 28, 30 மற்றும் செப்டம்பர் 1-ந் தேதிகளில் மான்செஸ்டரில் நடக்கிறது.

தினத்தந்தி

மான்செஸ்டர்,

இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பதவியில் இருந்து கழற்றி விடப்பட்ட பிறகு சர்ப்ராஸ் அகமது முதல்முறையாக 20 ஓவர் அணியில் இடம் பிடித்துள்ளார். முகமது ஹபீஸ், சோயிப் மாலிக் ஆகியோர் தங்களது இடத்தை தக்கவைத்துள்ளனர். பேட்ஸ்மேன் ஷான் மசூத்துக்கு அணியில் இடம் கிட்டவில்லை. பாகிஸ்தான் அணி வீரர்கள் வருமாறு:-

பாபர் அசாம் (கேப்டன்), பஹார் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ராவுப், இப்திகர் அகமது, இமாத் வாசிம், குஷ்தில் ஷா, முகமது ஹபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான், முகமது அமிர், நசீம் ஷா, சர்ப்ராஸ் அகமது, ஷதாப் கான், ஷகீன் ஷா அப்ரிடி, சோயிப் மாலிக், வஹாப் ரியாஸ்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்