கிரிக்கெட்

இன்று தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் விலகல்

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் டிரா ஆன நிலையில், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

தினத்தந்தி

பர்மிங்காம்,

இந்த போட்டியில் காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆடமாட்டார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இடது முழங்கை காயத்தால் அவதிப்பட்டு வரும் அவருக்கு தொடர்ந்து வலி இருப்பதால் விலகி இருக்கிறார். இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக இந்த முடிவை எடுத்துள்ளார். வில்லியம்சன் இல்லாததால் துணை கேப்டன் டாம் லாதம் கேப்டன் பொறுப்பை கவனிப்பார் என்றும், வில்லியம்சனுக்கு பதிலாக வில் யங் களம் இறங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியினருடன் காலதாமதமாக இணைந்ததால் முதல் போட்டியில் விளையாடாத இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் இந்த ஆட்டத்தில் களம் திரும்புகிறார்.

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியை பொறுத்தமட்டில் கடந்த டெஸ்டில் அறிமுக வீரராக இடம் பிடித்து 7 விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் 8 ஆண்டுகளுக்கு முன்பு டுவிட்டரில் வெளியிட்ட இனவெறி, இழிவான கருத்துகள் எதிரொலியாக சர்வதேச போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டு இருப்பதால் ஆட முடியாது. அதேபோல் அந்த அணியை சேர்ந்த மேலும் சில வீரர்கள் கடந்த காலங்களில் சமூக வலைதளங்களில் செய்த விமர்சனங்கள் தற்போது வினையாக மாறி இருக்கிறது. இந்த விவகாரத்தில் அடுத்து எந்த வீரரின் பெயர் வெளிவருமோ? என்ற நெருக்கடிக்கு மத்தியில் அந்த அணியினர் களம் காணுகின்றனர். இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு