கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் நியூசிலாந்து அணி வீரர்கள் பவுல்ட், லாதம் ஆடுவது சந்தேகம்

இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது.

தினத்தந்தி

ஆக்லாந்து,

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் வருகிற 24-ந் தேதி நடக்கிறது. இதற்கிடையில் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் செய்கையில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் கையுறையில் தாக்கியது. இதில் அவருக்கு வலது கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை. இதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சேன் அடித்த பந்தை கேட்ச் செய்கையில் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான டாம் லாதமுக்கு இடது கை சுண்டு விரலில் காயம் ஏற்பட்டது. எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் டாம் லாதமுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. காயம் அடைந்த அவர்கள் இருவரும் இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் ஆடுவது சந்தேகமாகி உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து