கிரிக்கெட்

சிஎஸ்கே அணியின் திறன் முற்றிலுமாக தீர்ந்துவிட்டதா? - ஸ்டீபன் பிளமிங் விளக்கம்

சிஎஸ்கே அணியின் திறன் முற்றிலுமாக தீர்ந்துவிட்டதா என்பது குறித்து தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கம் அளித்துள்ளார்.

அபுதாபி,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37-வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைக்க கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில், 7-விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. சென்னை அணி தோல்வி அடைந்ததால், நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாயுப்பு ஏறக்குறைய மங்கிவிட்டது.

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில், புள்ளிகள் பட்டியலை பார்க்கும்போது சிஎஸ்கே அணியின் திறன் முற்றிலுமாக தீர்ந்துவிட்டதாக தெரியும். ஆனால் இந்த அணியை வைத்துக்கெண்டு 2018ல் கோப்பையை வென்றோம், கடந்தாண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறி தோற்றோம். வயதான வீரர்களை கெண்டு இந்தாண்டு தெடர் கடினமாக இருக்கும் என்றே நினைத்தோம். மேலும் அமீரகத்தின் ஆடுகளம் தட்ப வெப்பம் ஆகியவையும் சிரமத்தை கெடுத்தது. உண்மையை செல்ல வேண்டுமென்றால் இப்போது அணியில் இருக்கும் வீரர்களின் மன நிலை சோர்வடைந்துள்ளது. கடந்த சில போட்டிகளில் நாங்கள் போராடினோம். ஆனால் ராஜஸ்தானுடனான போட்டியில் நாங்கள் முற்றிலுமாக போராடாமல் தோற்றோம். தெடரில் நீடிக்க வேண்டுமென்றால் நேற்றையப் போட்டியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பது தெரியும். ஆனால் இப்போதும் வாய்ப்பு இருக்கிறது என நம்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.