சிட்னி,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முழுநேர பயிற்சியாளர் பதவியை ஜஸ்டின் லாங்கர் சமீபத்தில் ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தற்போது அந்த அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மெக் டொனால்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய முழுநேர தலைமை பயிற்சியாளராகவும், அணியின் தேர்வாளராகவும் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ மெக் டொனால்டு நியமிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஆண்ட்ரூ மெக் டொனால்டு பயிற்சியாளராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.