கிரிக்கெட்

2-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு மீண்டும் இமாலய இலக்கை நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

இந்திய அணிக்கு 390 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது.

தினத்தந்தி

சிட்னி,

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அதே சிட்னி ஸ்டேடியத்தில் அங்கு பகல்-இரவு மோதலாக இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது. ஆஸ்திரேலிய அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சிறப்பாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு 142 ரன்களை வார்னர் - பிஞ்ச் ஜோடி சேர்த்திருந்த நிலையில், பிஞ்சும் 60 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வார்னர் 83 ரன்களில் ரன் அவுட் மூலம் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ஸ்மித் அபாரமாக ஆடி சதம் அடித்தார். 64 பந்துகளில் 104-ரன்கள் குவித்த ஸ்மித் ஹர்திக் பாண்ட்யா பந்தில் வெளியேறினார்.

மறுமுனையில் அபாரமாக விளையாடிய லபுஸ்சேன் 61 பந்துகளில் 70 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். எனினும், மேக்ஸ்வெல் மறுமுனையில் இந்திய அணியின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் அரைசதம் அடித்தார்.

ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 389- ரன்கள் குவித்தது. இதன் மூலம் 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேக்ஸ்வெல் 29 பந்துகளில் 63 ரன்களுடனும் ஹென்ட்ரிக்ஸ் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை