கிரிக்கெட்

கிரிக்கெட் வாரிய தலைவராக கங்குலி தேர்வு: லட்சுமண், ஷேவாக் வரவேற்பு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். லட்சுமண், ஷேவாக் வரவேற்பு, வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 23-ந்தேதி பொறுப்பு ஏற்க உள்ளார். அவருடன் இணைந்து விளையாடிய முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் வாழ்த்து தெரிவித்துள்ளார். லட்சுமண் தனது டுவிட்டர் பக்கத்தில், கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராகும் கங்குலிக்கு வாழ்த்துகள். உங்களது தலைமையில் இந்திய கிரிக்கெட் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் பயணிக்கும் என்பதில் சந்தேகமில்லை. புதிய பொறுப்பில் அடியெடுத்து வைக்கும் தாதா (கங்குலியின் செல்லப்பெயர்) வெற்றிகரமாக செயல்பட வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு இந்திய முன்னாள் வீரர் ஷேவாக் டுவிட்டர் பதிவில், கங்குலியின் தேர்வு, இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல அறிகுறியாகும். இந்திய கிரிக்கெட்டுக்கு ஏற்கனவே நீங்கள் அளித்துள்ள அளவில்லா பங்களிப்பு இந்த பதவியின் மூலம் தொடரும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு