ஹம்பன்டோனா,
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து பதும் நிசாங்கா, திமுத் கருணாரத்னே தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.இதில் நிசாங்கா 38 ரன், கருணாரத்னே 4 ரன், அடுத்து வந்த குசல் மென்டிஸ் 11 ரன், மேத்யூஸ் 12 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த அசலங்கா , டி சில்வா இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. இதில் டி சில்வா 51 ரன், அடுத்து வந்த ஷனகா 17 ரன் , ஹேமந்தா 22 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய அசலங்கா 91 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இலங்கை 10 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி ஆட உள்ளது.