கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா வீரர் சுமித் சதம் விளாசல்

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் சுமித் சதம் அடித்துள்ளார்.

தினத்தந்தி

மான்செஸ்டர்,

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. இதில் ஓய்விற்கு பின்னர் மீண்டும் களமிறங்கிய சுமித் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தார். தொடர்ந்து பொறுப்பாக ஆடிய சுமித் 26-வது சதத்தினை பதிவு செய்து அசத்தினார்.

தற்போது 2-ம் நாளான இன்று தேநீர் இடைவெளியின் போது ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 369 ரன்கள் (101 ஓவர்கள்) குவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் சுமித் 173 (263) ரன்களும், டிம் பெயின் 58 (126) ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது