கோப்புப்படம் 
கிரிக்கெட்

ஆசிய கோப்பையை வழங்க மறுப்பு: ஐ.சி.சி.யிடம் இந்தியா முறையீடு

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின.

தினத்தந்தி

துபாய்,

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது. பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது. இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில் ஆசிய கோப்பை மறுக்கப்பட்டது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) இந்தியா முறையிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் தேவ்ஜித் சைக்கியா தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று ஏற்கனவே நாங்கள் முடிவு செய்து விட்டோம். இதனால் ஒரு ஜென்டில்மேனாக அவர் பரிசளிப்பு விழாவில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

ஆசிய கோப்பை எங்களிடம் வழங்க மறுக்கப்பட்டது தொடர்பாக நவம்பர் மாதம் நடைபெறும் ஐ.சி.சி. கூட்டத்தில் முறையிடப்படும். விரைவில் ஆசிய கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் என்று நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு