கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. #INDVsBAG

தினத்தந்தி

துபாய்,

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் இருந்து நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான் அணிகளும், பி பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், வங்காளதேச அணிகள் அடுத்த சுற்றுக்கு (சூப்பர்-4) முன்னேறின. தங்களது இரண்டு லீக்கிலும் தோல்வியை தழுவிய இலங்கை மற்றும் ஹாங்காங் அணிகள் வெளியேற்றப்பட்டன.

இந்த நிலையில் சூப்பர்-4 சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது. சூப்பர்-4 சுற்றில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடந்தன. அதில் துபாயில் நடந்த ஒரு ஆட்டத்தில் இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொண்டது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம் காட்டினார்கள். வங்காளதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்களான லிட்டான் தாஸ், நுஸ்முல் ஹூசைன் 5.1 வது ஓவர்களுக்குள் தலா 7 ரன்களுடன் வெளியேறினர். இதனையடுத்து வங்காளதேச பேட்ஸ்மேன்கள் வலுவான கூட்டணியை அமைக்க இந்தியா அனுமதிக்கவில்லை.

இதனையடுத்து பின்வரிசையில் களமிறங்கிய வங்காளதேச வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 49.1 ஓவர்களில் வங்கதேச அணி 173 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக மெஹிதி ஹசன் 42(50) ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்திய அணிக்கு 174 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்திய அணியில் சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். சிறப்பான துவக்கத்தை தந்த இந்த ஜோடியால், அணியின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. அதில் அரைசதம் அடிப்பார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஷிகார் தவான் 40(47) ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடு, ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 63 பந்துகளில் தனது அரைசதத்தினை பூர்த்தி செய்தார். அப்போது ராயுடு 13(28) ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய தோனியும், ரோகித் சர்மாவும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். கடைசி நேரத்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற வைக்க நினைத்த தோனி 33(36) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

முடிவில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 83(104) ரன்களும், தினேஷ் கார்த்திக் 1(3)ரன்னும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் இந்திய அணி 36.2 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 174 ரன்கள் சேர்த்தது. வங்கதேச அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன், ஹொசைன், மோர்டசா ஆகியோர் தலா1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை