கிரிக்கெட்

ஆசிய கோப்பை போட்டி; டாஸ் வென்ற ஹாங்காங் அணி பேட்டிங் தேர்வு

ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

தினத்தந்தி

துபாய்,

6 அணிகள் இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று நடக்கும் 2வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் ஹாங்காங் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதனை அடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான நிஜாகத் கான் மற்றும் அன்ஷுமன் ராத் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

அந்த அணி 4 ஓவர்கள் முடிவில் விக்கெட்டுகள் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்துள்ளது. கான் (13) மற்றும் ராத் (4) ரன்களுடன் போட்டியில் விளையாடி வருகின்றனர்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

பாகிஸ்தான்: சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), இமாம் உல்ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம், சோயிப் மாலிக், ஆசிப் அலி, பஹீம் அஷ்ரப், ஹசன் அலி, ஷதப் கான், முகமது அமிர், ஜூனைத் கான் அல்லது ஷகீன் அப்ரிடி.

ஹாங்காங்: அன்சூமான் ராத் (கேப்டன்), பாபர் ஹயாத், கின்ஜித் ஷா, கிறிஸ்டோபர் கர்டர், இசான் கான், அய்ஜாஸ் கான், ஸ்காட் மெக்கெச்னி, தன்விர் அப்சல், இசான் நவாஸ், நதீம் அகமது, நிஜாகட் கான்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்