புதுடெல்லி,
டெல்லியில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 60 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஜப்பான் வீராங்கனை ரிசாகோ கவாயை எதிர்க்கொண்டார். போட்டியில் 0-10 என்ற கணக்கில் வென்று ஜப்பான் வீராங்கனை தங்கம் வென்றார். இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்றார். 55 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தும் வெள்ளிப்பதக்கம் வென்றார். இறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை நஞ்சோவை எதிர்க்கொண்ட வினேஷ் போகத் 4-8 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவினார்.