கிரிக்கெட்

உலக கோப்பையில் பும்ரா பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கருத்து

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆன்டி பிசெல் அளித்த ஒரு பேட்டியில், ‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முற்றிலும் வித்தியாசமானதாகும்.

புதுடெல்லி,

உலக கோப்பை போட்டியில் நெருக்கடியை கையாள்வது என்பது எளிதான காரியம் அல்ல. உலக கோப்பை போட்டியில் ஒரு சிறிய அணி கூட பெரிய அணியை வீழ்த்தி அதன் வாய்ப்பை சீர்குலைத்து விடும். ஆடுகளத்தின் தன்மையை சரியாக கணித்து செயல்பட வேண்டியது முக்கியமானதாகும். உலக கோப்பை போட்டியில் ஆல்-ரவுண்டர்கள் எப்பொழுதும் முன்னிலை பெறுவார்கள். அவர்கள் பேட்டிங்கில் சோபிக்காமல் போனால் கூட பந்து வீச்சில் விக்கெட்டை கைப்பற்றி அதனை சரிசெய்து விடுவார்கள். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக செயல்பட்டார்கள். மும்பை இந்தியன்ஸ் அணி ஐ.பி.எல். கோப்பையை வென்றதில் பும்ரா முக்கிய பங்கு வகித்தார். பும்ரா நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டியது அவசியமானதாகும். அவர் மற்ற 2 வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் (முகமது ஷமி, புவனேஷ்வர்குமார்) உதவிகரமாக இருப்பார். பும்ராவின் உடல் தகுதியில் இந்திய அணி கவனம் செலுத்த வேண்டும். அவர் நல்ல உடல் தகுதியுடன் இருந்தால் உலக கோப்பை போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று தெரிவித்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்