கோப்புப்படம்  
கிரிக்கெட்

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஆஸ்திரேலிய வீரர்களை நாடவில்லை - ஜெய்ஷா

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஆஸ்திரேலிய வீரர்களை நாடவில்லை என ஜெய்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் அவரது ஒப்பந்தம் முடிவடைந்தது. இருப்பினும் ஜூன் 1-ந் தேதி தொடங்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.

அவரது பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையை பி.சி.சி.ஐ. இப்போதே தொடங்கி உள்ளது. இதற்காக பி.சி.சி.ஐ. கவுதம் கம்பீர், ஸ்டீபன் பிளெமிங், விவிஎஸ் லக்ஷ்மன், ஜஸ்டின் லாங்கர், ஆசிஸ் நெஹ்ரா போன்ற முன்னாள் வீரர்களை அணுகியதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரி எந்தவொரு ஆஸ்திரேலிய வீரர்களிடமும் கோரிக்கை வைக்கவில்லை என பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்