கிரிக்கெட்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹேஸ்டிங்ஸ் காலில் காயம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹேஸ்டிங்ஸ் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சொந்த நாடு திரும்புகிறார்.

ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த ஜூனில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹேஸ்டிங்ஸ் (வயது 31). இவர் வொர்செஸ்டர்ஷைர் நகரில் நடந்து வரும் சசெக்ஸ் அணிக்கு எதிரான 4 நாட்கள் கொண்ட போட்டியில் இங்கிலீஷ் கவுண்டி அணியில் விளையாடினார்.

இந்த நிலையில், கவுண்டி அணிக்காக விளையாடிய அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து சிகிச்சை மற்றும் ஓய்வுக்காக அவர் சொந்த நாடு திரும்புகிறார்.

இதுபற்றி கவுண்டி அணியின் மருத்துவ நிபுணர் டேவிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹேஸ்டிங்சை எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கு உட்படுத்தினோம். அதில் அவரது காலில் எரிச்சல் மற்றும் காலின் எலும்பில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வருகிற நாட்களில் விளையாட உள்ளது. அந்த அணியில் ஜான் இடம் பெற வேண்டும் என அணி நிர்வாகம் விரும்புகிறது.

அதற்குள் உடல் நலம் குணமடைந்து அணி தேர்விற்கு ஜான் தயாராகி விடுவார் என நிர்வாகம் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக சொந்த நாடு திரும்புவதற்கு முன் செப்டம்பர் மற்றும் அக்டோபரில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்று பயணம் செய்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்