சிட்னி,
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டி தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டியில் பங்கேற்று வருகிறது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்திலும், சிட்னியில் நேற்று முன்தினம் நடந்த 2-வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னி நகரில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக மேத்யூ வேட் மற்றும் ஆரோன் பிஞ்ச் இருவரும் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
இந்தியா அணி விவரம்: ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட்கோலி (கேப்டன்), சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், டி.நடராஜன், யுஸ்வேந்திர சாஹல்.
ஆஸ்திரேலியா அணி விவரம் : ஆரோன் பிஞ்ச் (கேப்டன்) அல்லது டார்சி ஷார்ட், மேத்யூ வேட், ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், ஹென்ரிக்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அப்போட், டேனியல் சாம்ஸ், மிட்செல் ஸ்வெப்சன், ஆடம் ஜம்பா, ஆண்ட்ரூ டை.